தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர், மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் அனைத்து பணிகளும் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன. மழைக்காலத்தில் மழை நீர் 16 17 2 ஆகிய 3 வாா்டுகளில் தவிர மற்ற இடங்களில் எங்கும் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்வேறு வழித்தடம் கழிவு நீர் பம்பிங் மூலம் வௌியேற்றப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது முத்துநகர் கடற்கரை பூங்கா. ரோச் பூங்கா. ராஜாஜி பூங்கா எம்ஜிஆர் பூங்கா ஆகிய பூங்காக்கள் பொங்கலுக்கு மறுநாள் பொதுமக்கள் கருநாளன்று பொழுதுபோக்கும் வகையில் பூங்காவிற்கு வருவார்கள் அதன் அடிப்படையில் பூங்கா பராமரிக்கும் பணிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல பூங்காக்களில் நடைபயிற்சியின் போது உடற்பயிற்சி செய்யும் வகையில் பல பணிகள் நடைபெற்று வருகிறது. டூவிபுரம் சங்கர நாராயணன் பூங்கா உள்ளே நீர் தேக்க தொட்டி உள்ளது அதில் தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற முறையில் உள்ளது தற்போது சீரமைப்பு செய்யப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி சுற்றி பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பணிகளும் நடைபெற்று வருகிறது. முத்து நகர் கடற்கரையில் பொதுமக்கள் பொழுது போக்கும் வகையில் படகு சவாரி தனியாா் ஓப்பந்தத்துடன் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 147 வருடங்களுக்கு முன்பு உள்ள தெப்பக்குளம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சீரமைக்கும் பணி நடைபெற்றது அமோனியா இருப்பதால் அதிலுள்ள மீன்களை அப்புறப்படுத்தி நீரையும் வௌியேற்றிய போது அதில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் விரிசல் ஏற்பட்டு பணிகள் மீண்டும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தற்போது இருக்கும் வகையில் பழமை மாறாமல் சீரமைக்கப்பட உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி தெப்ப திருவிழா நடைபெற உள்ளது அதற்குள் பணிகள் முடிவடைந்தால் பொதுமக்கள் நான்கு புறமும் இருந்து தெப்பத் திருவிழா கண்டுகளிக்கும் வகையில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் பணிகள் முடிவடையாவிட்டால் கீழ்புறமும் மேல் புறமும் என இருபகுதிகளில் மட்டும் பொதுமக்கள் நின்று தெப்ப திருவிழா கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். இப்போது அமைக்கப்படுகின்ற கழிநீர்கால்வாய் வழித்தடங்கள் அனைத்தும் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் மூடி போட்டு தான் கால்வாய் அமைக்கப்படுகிறது. மாநகரில் டிஜிட்டல் போர்டு ரோட்டில் வைக்க கூடாது என்று கூறினாலும் பல இடங்களில் போர்டுகள் வைக்கப்படுகிறது அது ஒரு சவாலாகவுள்ளது. திருமணம் உள்ளிட்ட சில நிகழ்வுகளுக்கு திருமண மண்டபம் முன்பு சம்பந்தமான டிஜிட்டல் போர்டுகள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது ஆனால் பணம் 750 ரூபாய் மாநகராட்சிக்கு செலுத்தி விட்டு பல்ேவறு சாலைகளில் ஆங்காங்கே டிஜிட்டல் போா்டு வைக்கப்படுகிறது அதனால் பல சமயங்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு வருகிறது.
அதனையொட்டி டிஜிட்டல் போர்டு மாநகரில் முழுவதுமாக தடை செய்யலாமா என்று ஆணையருடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது இல்லை என்றால் குறிப்பிட்ட சில இடங்கள் ஒதுக்கப்பட்டு அந்த இடத்தில் மட்டும் டிஜிட்டல் போர்டு வைக்க அனுமதிக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோல மாநகரில் ஆங்காங்கே மாடுகள் சுற்றித் திரிவதால் சில விபத்துகள் ஏற்படுகிறது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது பிடித்து அபதார தொகை வசூலித்தாலும் மீண்டும் மீண்டும் சாலைகளில் மாடுகள் திரிந்து கொண்டு தான் வருகிறது ஆகையால் ஜனவரி 1ம் தேதி முதல் மாநகர் பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் பறிமுதல் செய்யப்பட்டு சங்கரன்கோவிலில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் மாடுகளை உரிமையாளருக்கு திரும்ப வழங்கப்பட மாட்டாது. மாநகரில் 1880 லைட்டுகள் புதியதாக மின்கம்பத்தில் பொருத்தப்பட உள்ளது விரைவில் அதற்கான பணிகளும் துவங்க உள்ளது அதுபோல் 3 ஆயிரம் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பல விடுபட்ட சாலைகள் அமைக்கும் பணியும் துவங்கப்பட உள்ளது. அதுபோல பாதாள சாக்கடை பணிகள் நமக்கு முக்கியம் அந்த இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்று மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா். பின்னா் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023ல் உள்ள வாி மற்றும வாியில்லா இனங்களுக்கான விதிகளில் சில விதிகளுக்கான திருத்தங்களுடன் நகராட்சி நிா்வாக இயக்குநகரத்தால் அரசானை எண் 480 படி அரசானையில் சொத்துவாி பெயா்மாற்றக்கட்டணம் மற்றும் வாியில்லா இணங்களில் 3 ஆண்டு கால முடிவிற்கான புதுப்பித்தல் கட்டணம் முதலியன மாற்றும் செய்யப்பட்டுள்ள விபரம் அடங்கிய அரசானை மாமன்றத்தின் பாா்வைக்கும் பதிவிற்கும் சமா்ப்பிக்கப்படுகிறது உள்பட பல்ேவறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னா் மாமன்ற உறுப்பினா்கள் வக்கீல் மந்திரமூர்த்தி, சரவணக்குமாா், கீதாமுருகேசன், வீரபாகு, கந்தசாமி, மும்தாஜ், முத்துமாாி, அதிஷ்டமணி, உள்பட உறுப்பினா்கள் தங்களது பகுதியில் நிறைவு செய்த பணிகளுக்கு நன்றி தொிவித்தும் கோாிக்கைகளையும் முன்வைத்து பேசினாா்கள். பின்னா் மேயா் ஜெகன் பொியசாமி பதிலுரையில் விவிடி சிக்னல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நொிசலை குறைக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே போல் அந்த பகுதியில் உள்ள காலிஇடங்கள் பல்வேறு வகைக்கு பயன்படுத்தப்படுகிறது. அதை முழுமையாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் வைத்து சில மாநகராட்சிகளில் நடைமுறைப்படுத்தியது போல் குறைந்த கட்டணத்தில் நிகழ்வு நடத்துவதற்கு அதை முறைப்படுத்துவதற்கும் வழிவகை செய்யப்படும் தற்போது 53 பூங்காக்கள் பல்வேறு வகையில் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது விரைவில் முதியோா்களுக்கான பூங்காக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மொத்தம் 206 பூங்காக்கள் அடங்கிய மாநகராட்சி பகுதியாக உருவாகும் நிலை இருக்கிறது. மாநகராட்சி பகுதியில் 26 கிலோ மீட்டா் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. அந்த பகுதியிலும் நாம் தான் பல பணிகளை மேற்கொண்டு வருகிறோம் 50வது வாா்டு அடங்கிய சில பகுதிகளில் உப்பளமாக இருந்தது தற்போது குடியிருப்பாக மாறி வருவதால் அதற்கேற்றாற்போல் கட்டமைப்பு பணிகளை உருவாக்கி வருகிறோம் மொத்தத்தில் ஓருவாரம் பொறுத்துக்கொள்ளுங்கள் அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு முழுமையாக நிறைவு பெறும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லோருக்கும சிறப்பாக அமையட்டும். என்று வாழ்த்துக்களை கூறி இந்த ஆண்டின் கடைசி கூட்டம் நிறைவு பெற்றது.
கூட்டத்தில் இணை ஆணையா் சரவணக்குமாா், மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் காந்திமதி, உதவி ஆணையர் வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகா், மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, கலைச்செல்வி, அன்னலெட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் கீதாமுருகேசன், அதிஷ்டமணி, சரவணக்குமார், ரெங்கசாமி, பொன்னப்பன், ஜான்சிராணி, சந்திரபோஸ், முத்துவேல், மும்தாஜ், ராமுஅம்மாள், தனலெட்சுமி, முத்துமாரி, விஜயகுமாா், கனகராஜ், ஜாக்குலின்ஜெயா, ஆறுமுகம் வைதேகி, மெட்டில்டா, சுப்புலட்சுமி, பாப்பாத்தி, ரெக்ஸ்லின், வக்கீல் வீரபாகு உள்பட மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் மாடு திரிந்தால் இனி மாநகராட்சிக்கு சொந்தம் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வருகிறது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்


