தூத்துக்குடி தமிழரின் கலைகள், தமிழரின் மருத்துவம், தமிழரின் உணவுகள், நாட்டு நாய்கள் போன்றவையை பறைசாற்றும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் தமிழன்டா இயக்கம், கலைக்குழு சார்பில் 2000 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் 2026 விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம், கே. சின்னத்துரை அன் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்யா குழுமம், சைன் யோகா பவர், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம், காமராஜ் கல்லூரி, உடற்கல்வித்துறை, காமராஜ் மகளிர் கல்லூரி, கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகடாமி, பிளாக் ஃபாரஸ்ட் லீட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி, யோவா அகடாமி, ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் 3வது தமிழன்டா சங்கமம் நடைபெற்று வருகிறது.
இயற்கைமருத்துவ கண்காட்சியையும் மாநில அளவிலான் சிலம்பம் போட்டியையும், அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்து பாா்வையிட்டு சிலம்பம், விளையாடினாா்.
விழாவில் தெற்கு மாவட்ட அதிமுக துணைச்செயலளார் சந்தனம், மாவட்ட வா்த்தக அணி செயலாளர் துரைசிங், முன்னாள் கவுன்சிலா் அகஸ்டின், பகுதி சிறுபான்மைபிாிவு செயலாளர் அசன், போக்குவரத்து தொழிற்சங்க நிா்வாகிகள் சங்கா் பேச்சியப்பன், தமிழன்டா கலைக்குழு இயக்க தலைவர் ெஜகஜீவன், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமத்தில் இயற்கை மருத்துவ கண்காட்சியையும் மாநில அளவிலான் சிலம்பம் போட்டியையும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தாா்.


