திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இருகண்கள் தூத்துக்குடி மேயர் ஜெகன் பொியசாமி பேசினார். தூத்துக்குடி லைசன்ஸ் தாரா்கள் உப்பளங்களில் விற்று முதல் சுமை வேலைகள் செய்து வரும் சங்கத்தின் உறுப்பினா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கும் நிகழ்ச்சி

திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இருகண்கள் தூத்துக்குடி மேயர் ஜெகன் பொியசாமி பேசினார். தூத்துக்குடி லைசன்ஸ் தாரா்கள் உப்பளங்களில் விற்று முதல் சுமை வேலைகள் செய்து வரும் சங்கத்தின் உறுப்பினா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கும் நிகழ்ச்சி போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கி மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் திமுகவில் கலைஞாின் முரட்டு பக்தனாக இருந்து எனது தந்தையார் 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தொழிலாளர்கள் நலன் மட்டுமின்றி திமுகவின் வளர்ச்சிக்கும் பணியாற்றியது மட்டுமின்றி ஓவ்வொரு ஆண்டும். உப்பள அதிபர்களுடன் இணக்கமாக பேசி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வும் பெற்று கொடுத்தாா் அவரது மறைவிற்கு பின்பு பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் வேண்டுகோளின்படி அப்பணியை தொடர்ந்து பொறுப்பேற்று செய்து வருகிறேன். மாநகரின் அடையாளமும் பிரதான தொழிலுமான உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடி உப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களக்கு தாங்கள் சிறு சிறுக சேமித்த பணத்தை சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அவர்களுக்கு போனஸாக வழங்கி வருகிறேன் உங்கள் தலைமுறைக்கு பின்னா் வரும் குடும்ப உறுப்பினா்கள் திமுகவிற்கும் தளபதியாருக்கும் துணையாக இருக்க வேண்டும். திமுகவும் தொழிலாளா்களும் எனக்கு இருகண்கள் என்று பேசினாா்.

நிகழ்ச்சியில் செயலாளா் மூர்த்தி, வட்டச்செயலாளர் ரவீந்திரன், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உப்பள சங்கத்தை சேர்ந்த கனகராஜ், விஜி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *