தமிழக வெற்றி கழகத்தின் விளாத்திகுளம் வடகிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பு எபநேசர் -க்கு தமிழக வெற்றி கழகத்தின் மாநில தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார்கள் நியமன உத்தரவு சான்றிதழை எபினேசர், பெற்றுக்கொண்டார். விஜய் வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று மிகப் பெரிய சாதனை பெற வேண்டும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் கோட்டையாக மாற்ற வேண்டும் மற்றும் கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களோடும் இணைந்து கழகப் பணியில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் தலைமை கழகத்தினுடைய ஆலோசனைப்படி தமிழக வெற்றி கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார்.


