அதிமுக நிறுவனர் மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு நாள். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் படத்திற்கும் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை.

தூத்துக்குடி டிச 25,

மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான பாரத ரத்னா எம்ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24, நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கும் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வுகளில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாவட்ட கழக துணைச் செயலாளர் வசந்தா மணி, மாவட்ட கழக பொருளாளர் சேவியர், பகுதி செயலாளர்கள் முருகன், சுடலைமணி, ஜெய்கணேஷ், நட்டார்முத்து, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் எம்.பெருமாள், பில்லா விக்னேஷ், இலக்கிய அணி நடராஜன், டேக் ராஜா, கே.ஜெ.பிரபாகர், ஜெ.ஜெ.தனராஜ், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, முனியசாமி, ராஜ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், முத்துக்கணி, நவ்சாத், ஐடியல் பரமசிவன், தெர்மல் ஆனந்தராஜ், மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்விக்குமார், இணைச் செயலாளர் லெட்சுமணன், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், கவுன்சிலர் வெற்றி செல்வன், தலைமைச் கழக பேச்சாளர் முருகானந்தம், ஜான்சன்தேவராஜ், எ.கே.மைதீன், வர்தக அணி சுகுமார், அலெக்ஸ்.ஜி, சண்முகபுரம் மாடசாமி, ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், கே.டி.சி.ஆறுமுகம், மிக்கேல், பொன்ராஜ், தங்க மாரியப்பன், எஸ்.கே.மாரியப்பன், ஹார்பர் பாண்டி, கே.கே.பி.விஜயன், மேற்கு பகுதி துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மெஜுலா, சாந்தி, இந்திரா, இராஜேஸ்வரி, அன்னபாக்கியம், முத்துலெட்சுமி, ஷாலினி, சரோஜா, அகிலா, வக்கீல் ராஜகுமார் அபிரகாம், இம்ரான், தீனா வசந்த், வட்ட கழக செயலாளர்கள் மாகாராசன், டேவிட் ஏசுவடியான், சங்கர், சந்திரசேகர், ஜெரால்டு, மணிகணேஷ், பாம்பு முருகன், ரெங்கன், ரகுநாதன், உதயசூரியன், ஜெயக்குமார், பொன் சிங், உலகநாத பெருமாள், மனோகர், பூர்ணசந்திரன், செல்வராஜ், மாடசாமி, மாரிமுத்து, அசோகன், சேவியர் ராஜ், எம்ஜிஆர் நடராஜன், ஒப்பனைக் கலைஞர் எம்.ஜி.ஆர்.மைதீன் ஏசுதாஸ், பரிபூரணராஜா, சம்மபடி பழனி, எம்.எஸ். மணி, முள்ளக்காடு ஸ்ரீராம், இம்ரான், ரியாஸ், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, சிதம்பர ராஜா, உள்ளிட்ட பிற சார்பு அணி நிர்வாகிகள், மகளிரணியிணர்,தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Regards with
AIADMK PARTY OFFICE THOOTHUKUDI (SOUTH)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *