தூத்துக்குடியில் 3நாட்கள் தமிழன்டா சங்கமம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி, எம் எல் ஏ சண்முகையா போன்றோர் பங்கேற்பு ஜெகஜீவன் அழைப்பு


தூத்துக்குடி தமிழரின் கலைகள், தமிழரின் மருத்துவம், தமிழரின் உணவுகள், நாட்டு நாய்கள் போன்றவையை பறைசாற்றும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் தமிழன்டா இயக்கம், கலைக்குழு சார்பில் 2000 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழன்டா இயக்கம், கலைக் குழு தலைவர் ஜெகஜீவன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் 2026 விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம், கே. சின்னத்துரை அன் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்யா குழுமம், சைன் யோகா பவர், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம், காமராஜ் கல்லூரி, உடற்கல்வித்துறை, காமராஜ் மகளிர் கல்லூரி, கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகடாமி, பிளாக் ஃபாரஸ்ட் லீட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி, யோவா அகடாமி, ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் 3வது தமிழன்டா சங்கமம் ஜனவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் 9ம் தேதி காலை 6 மணிக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் நடைபெறும் ஓட்டப்பந்தயம் மாரத்தான் போட்டியை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைக்கிறாா். அது ஐந்து பிரிவுகளில் நடைபெறுகிறது. பள்ளி அளவில் மாணவர்களுக்கு, மாணவியர்களுக்கு தனியாகவும் கல்லூரி அளவில் ஆண், பெண்களுக்கு தனியாகவும் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தனியாகவும் மொத்தம் ஐந்து பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் பள்ளி அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 5000 இரண்டாம் பரிசு ரூபாய் 3000 மூன்றாம் பரிசு ரூபாய் 2000 என்று வழங்கப்படுகிறது. ஏனைய போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழன்டா விருதுகள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
காலை 9 மணிக்கு பொங்கல் விழா காமராஜ் கல்லூரி, காமராஜ் பெண்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடைபெறும் நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைக்கிறாா். இல வட்டக்கல் தூக்குதல், அம்மியில் தேங்காய் சில்ரைத்தல், ஆட்டு உரலில் மாவு அரைத்தல், பம்பரம், கோலிக்கா ஆட்டம், கிட்டி கம்பு, நொண்டி அடித்து விளையாடுதல் உட்பட பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெறுகிறது. பின்னர் பரிசளித்தில் விழா நடைபெறுகிறது. ஆயிரம் பனை கொட்டைகள் நடும் நிகழ்்ச்சியும் நடைபெறுகிறது.
இரண்டாவது நாள் நிகழ்வில் காலை 7:00 மணிக்கு தூத்துக்குடி அந்தோணியார் புரம் பனைமரக்காடு பகுதியில் பனை மரத்தில் ஏறும் போட்டி நிகழ்கிறது. முதல் பரிசு ரூ 10,000 இரண்டாவது பரிசு ரூ 5000 மூன்றாவது பரிசு ரூ 3000 அதில் பனை சார்ந்த கண்காட்சியும் இடம்பெறுகிறது. காலை 10 மணிக்கு காமராஜ் கல்லூரி வளாகத்தில் நாட்டு நாய்கள் கண்காட்சி பரிசளிப்பு வழங்கும் நிகழ்வு மாநில அளவில் சிலம்பம், யோகா போட்டிகள், கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.
மூன்றாவது நாள் நிகழ்வில் காலை 7 மணிக்கு நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. எட்டு மணிக்கு கும்பாவில் பழைய கஞ்சி குடிக்கும் நிகழ்வு, அன்றைய தினம் நூற்றுக்கு மேற்பட்ட கலைக்குழு கலைஞர்கள் கலை நிகழ்வுகளை நிகழ்த்துகிறார்கள். மாலை 3 மணிக்கு நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் இருந்து தொடங்கி பீங்கான் ஆபீஸ் ரவுண்டானாவரை சென்று மீண்டும் காமராஜ் கல்லூரிக்கு பேரணி சென்றடைகிறது. மாலையில் தமிழன்டா விருது வழங்கும் நிகழ்வு பரிசளிப்பு போன்றவை நடைபெறுகிறது.
மூன்று நாட்களும் இயற்கை மருத்துவம், வர்மம், ஓமியாபதி, சித்தா, ஆயுர்வேதா போன்ற மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. நோயாளிகள் பார்க்கப்படுகிறார்கள். மூன்று நாட்களும் இலவசமாக கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. பதினோராம் தேதி ஞாயிற்றுக்கிழமை கண் சிகிச்சை முகாமில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு கண்கண்ணாடி, ஆபரேஷன் போன்றவைக்கு ஏற்பாடு செய்யப்படும். மூன்று நாட்களும் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி நடைபெறுகிறது. மூன்று நாட்களும் ஆய்வு செய்து யோவா உலக சாதனை நிகழ்வு நடைபெறுகிறது. 11ம் தேதி காலை 8 மணிக்கு கோலம் உலக சாதனை 45 நிமிடங்களில் 500 போட்டியாளர்கள் ஒரே உலக சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோலம் போட பொருள்கள் கொண்டு வந்து கலந்து கொள்ளவும் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற முன் அனுமதி அவசியம் என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *