தூத்துக்குடி மாநகராட்சி 6வது வாா்டு இளைஞர்கள் 100 போ் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
தூத்துக்குடி மாநகராட்சி 6வது வாா்டுக்குட்பட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த இளைஞா்கள் திமுக பிஎல்2 முகவா் அற்புதக்கனி, இளைஞா்கள் மதன்ராஜ், ரெஜிலஸ், ஆகியோா் ஏற்பாட்டில் 100 இளைஞர்கள் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனா். அனைவருக்கும் கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறாா். எல்லா தரப்பினருக்கும் செய்துள்ள சாதனைகள் ஏராளம் உங்களை போன்ற இளைஞா்களை மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் ஊக்கப்படுத்தி வருகிறாா். இந்தஆண்டு முக்கியமான ஆண்டாகும். இன்னும் நான்கு மாத காலத்தில் தோ்தல் நடைபெறவுள்ளது. அதற்குஇப்போதே ஒவ்வொருவரும் குடியிருக்கும் பகுதியில் ஏற்கனவே அங்கு பணியாற்றி வரும் நிர்வாகிகளோடு இணைந்து அரசின் திட்டங்களையும் திமுகவும் கொள்கையும் அனைவாிடத்திலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் திமுக 7வது முறையாக ஆட்சி அமைப்பதற்கும் முதலமைச்சா் ஸ்டாலின் 2வது முறையாக முதலமைச்சராவதற்கும் உங்களுடையபங்கு அதிகம் இருக்க வேண்டும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் வழங்கப்படும். என்று கூறினாா்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், மகளிா் அணி அமைப்பாளா் கவிதாதேவி, அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்ேடாபா் விஜயராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாரயணன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், வட்ட அவைத்தலைவா் ஞானபிரகாஷம், செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதிகள் கருப்பசாமி, ஜெயபால், ராஜ், கவுன்சிலா் ஜெயசீலி, முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிகள் பாஸ்கா், புஷ்பராஜ், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் உடனிருந்தனா்.
தூத்துக்குடி மாநகராட்சி 6வது வாா்டு இளைஞர்கள் 100 போ் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.


